சங்கானை மக்களுக்கு சங்கூதும் செயற்பாடு!! நடு வீதி வாகனத் தரிப்பிடமா?? விசனத்தில் மக்கள்!! (Video,Photos)
சங்கானை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள சந்தியிலிருந்து பண்டத்தரிப்பு செல்லும் வைத்தியசாலை உப வீதியில் வான்கள்,லொறிகள்,முச்சக்கர வண்டிகள் என எட்டிற்கும் மேற்பட்ட வாகனங்கள் நடுவீதியில் இரவு பகலாக நிறுத்தவைக்கட்டிருக்கின்றது.அத்துடன் வாகனங்களை கழுவுதல், திருத்துதல் என்பனவும் நடுவீதியிலேயே இடம்பெறுகின்றது.



ஏற்கனவே வீதியும் மிக மோசமாக உள்ள நிலையில் பொறுப்பில்லாமல் இவர்கள் நடப்பதால் நோயாளர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.பல வருடங்களாக இடம் பெறும் இந்த சமூக விரோத செயலால் அவ்வீதியூடாக அம்புலன்ஸ், நோயாளர்கள் செல்வதில் பெரும் சிகல்கல் நிலவுகிறது.தற்போது வீதி அபிவிருத்திக்காக அவ்வழியால் செல்லும் டிப்பர் வாகன சாரதிகளும் பெரும் அசௌகரியத்திற்குள்ளாவதாக தெரிவிக்கின்றனர்பொலிசாரோ, வலிகாமம் மேற்கு பிரதேச சபையினரோ அப்பகுதி உறுப்பினர்களோ நோயாளர்களின் நலனில் அக்கறை எடுப்பதில்லை என்பது மக்களின் கவலையாகும்.பண்டத்தரிப்பு,வடலியடைப்பு,சில்லாலை,மாதகல் ,சுழிபுரம் ,இளவாலை போன்ற பகுதியிலிருந்து வைத்தியசாலை செல்லும் நோயாளர்களே வாகனத்தரிப்பு பிரச்சனையால் பெரிதும் பாதிப்படைகின்றன்னர்.
தூய்மையற்ற வீதிகள்
வலிகாமம் மேற்கில் காணப்படும் ஏனைய வீதிகள் மிகவும் தூய்மையாக காணப்படுகின்ற போதிலும் இந்த ஐந்து வீதிகளும் பெரும்பாலும் பற்றைகள் சூழ்ந்த்தாகவும் வீடுகளில் வெட்டப்படும் தாவரக்கழிவுகள் வீதிகளில் போடப்படுவதாலும் போக்குவரத்து செய்வதில் மேலும் அசௌகரியங்களை நோயாளர்களும் பொதுமக்களும் எதிர்கொள்கின்றனர்.




