புதினங்களின் சங்கமம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் முடிவு என்ன? – ரணிலுடன் நீண்ட பேச்சு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்திற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) அலரி மாளிகையில் நடைபெற்றது.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

தமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டுள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் ஆதரவு சஜித் பிரேமதாவிற்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளின் ஆதரவின் முக்கியத்துவம் குறித்து தமிழ் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது பிரதமர் தெளிவுப்படுத்தினார்.

தமது கட்சிகளின் நிலைப்பாட்டை நாளை அறிவிப்பதாக குறித்த பங்காளிக் கட்சிகள் தெரிவித்துள்ளன.