புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி!! பணம் அனுப்பிய ஈழத்தமிழன்!!

யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு நிதி உதவி வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தது.

இதற்கு வலு சேர்க்கும் முகமாக லண்டன் வாழ் ஈழத்தமிழர் ஒருவர் தனது பங்களிப்பினை உடனடியாக செலுத்தி மாணவர்கள் கோரிக்கைக்கு வலு சேர்த்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ் பல்கலைகழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கட்டுமான பணிக்கான எனது சிறு பங்களிப்பை செய்துள்ளேன்

மக்கள் அனைவரினதும் பங்களிப்புடன் இந்த நினைவு தூபியை கட்டிமுடிக்க வேண்டும் என்ற அவர்களது முயற்சிக்கு உறுதுணையாக நிக்க வேண்டியது உலக தமிழர்கள் ஒவ்வொருவரினதும் கடமை

உங்களால் முடிந்த பங்களிப்பை (ஒரு ரூபாவாக இருந்தாலும் கூட ) வழங்குங்கள்.

இதில் சேரும் காசில் நினைவு தூபி கட்டுவதற்கான செலவு தவிர்ந்த அனைத்தும் நிலையான வைப்பிலிடப்படும் என்றும் அந்த நிலையான வைப்பு தொகை எதிர்காலத்தில் மாணவர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்படும் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள்

அவர்களது இந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துவதோடு உங்கள் அனைவரின் பங்களிப்பையும் வழஙகுமாறும் கேட்டு கொள்கிறேன்

அவர்களது வங்கி கணக்கு விவரம் வருமாறு , யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் மக்கள் வங்கி 162100100000661

குறிப்பு
மாணவர் ஒற்றியம் நிதி சேகரிப்பதற்கு வேறு எவருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. நன்றி வ சிவரதன் லண்டன்