புதினங்களின் சங்கமம்

வவுனதீவு பொலிசார் கொலை!! புலிகள் மீது வீண் பழி!! தாயும் பிள்ளைகளும் நடுத்தெருவில்!!

சில மாதங்களுக்கு முதல் வவுணதீவில் காவலில் இருந்த இரண்டு பொலிசாரை கொலை செய்துவிட்டு அவர்களின் துப்பாக்கிகளை பறித்து கொண்டு சென்றதாக, பொட்டம்மானின் சகாவை கிளிநொச்சியில் கைது செய்து இன்றும் சிறையில் வைத்திருக்கிறார்கள்.

இன்று தற்கொலை தீவிரவாதி சஹறானின் சாரதி தாங்கள் தான் அதனை செய்தோம் என ஒப்பு கொண்டான்.

இங்கே எழும் கேள்வி

எந்த அறிவில கிளிநோச்சிக்கு வந்து முன்னாள் போராளியை கைது செய்தீர்கள்?

இப்படி எத்தனை பேரை செய்யாத குற்றத்துக்காக உள்ளே தள்ளியுள்ளீர்கள்?

இவற்றை ஆராய்ந்து அப்பாவிகளை எப்ப வெளிய விடுவீங்கள்?

இதேவேளை இத்தாக்குதலை விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளே நடத்தியதாகக் கூறி கிளிநொச்சியைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன் குறித்த சம்பவத்தில் கைதான தனது கணவனை விடுவிக்குமாறும் தமக்கு சாப்பாட்டுக்கே வழியில்லாமல் செய்துவிட்டார்கள் எனவும் தனது பிள்ளைகளுடன் இளம் தாய் வீதியில் உண்ணாவிரதப் போராட்டம் செய்திருந்தார். அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவு எந்த அளவுக்குச் செயற்பட்டுள்ளது என்பது இதிலிருந்து தெரிகின்றது.