யாழ் ராணி ரயிலுடன் பருத்தித்துறை அரச பேரூந்து மோதி விபத்து!! (வீடியோ)
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புகையிரதம் , இ.போ.ச பேருந்து மற்றும் கப் ரக வாகனம் என்பன விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
தெய்வாதீனமாக குறித்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. பேருந்தில் பயணித்த சிலர் காயங்களுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில் , யாழில் இருந்து சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் ,யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீடாதிபதியின் கப் ரக வாகனமும் புகையிரதத்துடன் விபத்துக்கு உள்ளாகியுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதே வேளை இன்று யாழ் ராணி மற்றுமொரு விபத்தில் சிக்கியதாக தெரியவருகின்றது. வவுனியாவிலிருந்து வரும் போது கார் ஒன்றையும் மோதி சேதமாக்கியுள்ளது.












