யாழ்ப்பாணத்தில காணி வாங்க வேண்டும் என்ற கள்ளக்கடத்தல் தான் பண்ணணும்!!
யாழ்ப்பாணத்தில் இந்த காணிப் புரோக்கர்களின் அராஜகம் அதிகரித்துள்ளது. முச்சந்திக்கு முச்சந்தி புரோக்கர்களும், புரோக்கர் நிறுவனங்களும் ஆக்கிரமித்து, இருக்கிற காணிகளைவிட புரோக்கர் நிறுவனங்கள் அதிகமாயிட்டுது.
நண்பன் ஒருவனுக்காக பருத்தித்துறை வீதியில் வீட்டுடன் காணியொன்று பார்ப்பதற்கு புரோக்கர் கூட்டிச் சென்றார். காணி பார்த்து, முடிய 60 லட்சம், கடைசி 56 என்றால் முடிக்கலாம் என்றார். அதற்கு குறையா முடியாது என்றார். இடம், வீட்டின் அளவு என்பவற்றை பார்க்க, 45 தேறும் என்றே தோன்றியது. வீட்டுக்கு சொந்தக்கார என்று ஒரு வயதான அம்மா வந்தார். அந்த அம்மாவை எங்கேயோ கண்ட ஞாபகம்.
காணி பார்த்துவிட்டு வருகையில் தான் அந்த அம்மா யார் என்று ஞாபகம் வர, திருப்பிக் கொண்டு அந்த அம்மா வசிக்கும் வீட்டிற்குச் சென்று, அம்மா என்னை ஞாபகம் இருக்கா, என்று கதை சொல்ல, மனுசி பக் என்று பிடிச்சிட்டு. உங்கள் காணியை பார்க்க தான் வந்தம், ஏனம்மா காணியை இவ்வளவு கூடச் சொல்லுறியள் என்றேன்.
உனக்கு சொல்ல என்னடா, எனக்கு ஒரு 37 இலட்சம் முடிச்சா காணும், இந்த புரோக்கர் தான் கூடக்கொடுப்பம் என்று சொல்லுறான். 37 என்றா கொடுத்துவிடுவம், அந்தளவு தான் பெறுமதிவரும், சும்மா யாற்றையின் வயிற்றில அடிக்ககூடாது என்றார்.
தொழில் முயற்சியென்று, காணி வாங்கி விற்கும் தொழில் செய்ய வெளிக்கிட்ட கனபேர், ஒரேநாளில் பணக்காரன் ஆகனும் என்ற மைன்ட் செட்டில திரிகினம். அதால, சும்மா கிடந்த காணிகளை எல்லாம், கண்டபடி விலை ஏத்திவிட்டு, தங்கள் வயிற்றை நிரப்புகிறார்கள்.
காணி வாங்கி வீடு கட்டுற ஒவ்வொருத்தனின் கனவு. ஓட்டுமாட்டு செய்யாமல் நியாயமாக உழைப்பவன் எவனும், இப்ப புரோக்கர்மார் நிர்ணயிக்கின்ற விலையில் காணி வாங்க முடியாது. கஞ்சா தான் கடத்தனும்.
முக்கியமான மார்க்ட் கடைகள் வாடகைக்குபோற பெறுமதி, விற்கிற பெறுமதிக்கு கடைகள் வாங்கி பிஸ்னெஸ் செய்ய முடியாத நிலை. 10 க்கு 10 கடைக்கு 30 ஆயிரம் வாடகைக்கு எடுத்து, என்ன போட்டு உழைத்து என்ன செய்யலாம்…
ஒரு காணி வாங்க வேண்டும் என்ற ஒருத்தனுடைய கனவில, மண்ணள்ளி போடாதயுங்கள்…
யாழ்ப்பாணத்தில் அதிகவிலைகூடிய பெறுமதியுடைய காணி நல்லூர் பின்வீதியில் தான் இருக்கு, என்றதுக்கும் இங்க குடியிருக்கிற ஆளுக்கும் சம்பந்தமில்லை. எல்லாம் புரோக்கர்ஸ்….

