சினிமாபுதினங்களின் சங்கமம்

பிக்பாஸ் வீட்டுக்குள் யாழ்ப்பாணத்து பெண்ணை அனுப்ப முடிவு செய்திருந்த நிர்வாகம்; திடீரென வந்த பிரச்சினை..!

தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிகழ்ச்சி கொரோனா காலமென்பதால் வழக்கத்தைவிட அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகின்றது.

மேலும் கடந்த வ்ருடம் இடம்பெற்ற பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து லொஸ்லியா கலந்துகொண்டிருந்தனர், இதனால் இந்த நிகழ்ச்சி புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சியை பார்க்க தூண்டியது, இதனால் இந்த நிகழ்ச்சி உலகளவில் பிரபலமடைந்தது.

இதனை கெட்டியாக பிடித்துக்கொள்ள விரும்பிய விஜய் தொலைக்காட்சி இம்முறை நடந்துகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் இலங்கையை சேர்ந்த ஒருவரை வீட்டுக்குள் அனுப்ப முடிவு செய்து, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவரை தெரிவு செய்து வைத்திருந்ததாகவும், தொடர்ந்து வந்த கொரோனா பரவல் காரணமாக அந்த முடிவு கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் போயிருந்தால் இன்று அஜீத், பாலா போன்றோர்கள் உள்ளே சென்றிருக்க மாட்டார்கள் என கூறப்படுகிறது.