புதினங்களின் சங்கமம்

சிறுத்தை கடித்து பலியான இளைஞர்-பின்னணியில் தெரியவந்த திடுக்கிடும் உண்மை!

வனவிலங்கு காரியாலயம் மீது தாக்குதல் மேற்கொண்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை – பானம பிரதேசவாசிகளால் நேற்றிரவு வெள்ளிக்கிழமைபானம வனவிலங்கு காரியாலயம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த தாக்குதலை மேற்கொண்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 30 ஆம் திகதி பானம – குடும்பிகலயில் சிறுத்தையின் தாக்குதலுக்குள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக குறித்த பிரதேச வாசிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வனவிலங்கு காரியாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டு சேதமேற்படுத்திய 5 பேரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, அவர்களை இன்றைய தினம் பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.