புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் நான்காவது தொற்று அலை! விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

கனடாவில் COVID தொற்றின் நான்காவது அலையின் பரவலை தடுக்க தடுப்பூசிகள் மாத்திரம் போதாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மீண்டும் தடைகளைத் தவிர்ப்பதற்கும், தடுப்பூசி போடாதவர்களை பாதுகாப்பதற்கும் கனேடியர்கள் கிடைக்கக்கூடிய அனைத்து பொது சுகாதார வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொற்றுக்கு எதிராக 10 மில்லியனுக்கும் அதிகமான கனேடியர்கள் தடுப்பூசி போடப்படாத நிலை தற்போது உள்ளது.

இதனால் புதிய தொற்றின் மாறுபாட்டால் ஏற்கனவே சவால்களை எதிர்கொள்ளும் சில மாகாணங்களின் மருத்துவமனைகள் மேலும் சவால்களை எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது

Northwest பிரதேசங்கள் மீண்டும் முககவச கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது.COVID தொற்றின் அதிகரிப்புக்கு மத்தியில் இந்த அறிவித்தல் வெளியானது.வியாழன் காலை முதல் அனைத்து உட்புற பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படுகிறது.

Northwest பிரதேசங்களில் விரைவாக பரவி வரும் Delta மாறுபாட்டுக்கு எதிரான சிறந்த பாதுகாப்புகளில் முகக்கவசங்கள் ஒன்றாகும் என தலைமை பொது சுகாதார அதிகாரி கூறினார்.

தொற்றின் தொடர்ச்சியான அதிகரிப்பை எதிர்கொள்ளும் முகமாக British Colombia மாகாணமும் Manitoba மாகாணமும் இந்த வாரம் முககவச சட்டங்களை மீண்டும் அறிவித்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மூன்று மாதங்களில் முதல் முறையாக 1,000க்கும் அதிகமான புதிய COVID தொற்றுக்களை Alberta புதன்கிழமை பதிவு செய்துள்ளது.

புதன்கிழமை 1,076 புதிய தொற்றுக்கள் Albertaவில் பதிவாகின. இது May மாதம் 15ஆம் திகதிக்கு பின்னரான அதிகூடிய ஒரு நாளுக்கான தொற்றுக்களின் எண்ணிக்கையாகும்.

புதன்கிழமை ஒரு மரணமும் Albertaவில் பதிவாகியுள்ளது..Alberta மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பிரிவுகளிலும் உள்ள COVID நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது

Alberta, வைத்தியசாலைகளில் 284 பேரை அனுமதித்துள்ளது. இது June மாதம் 15ஆம் திகதிக்கு பின்னரான அதிக எண்ணிக்கையாகும்.

தவிரவும் புதன்கிழமை British Columbiaவில் 698 தொற்றுகளும் ஒரு மரணமும், Ontarioவில் 660 தொற்றுகளும் ஒரு மரணமும், Quebecகில் 550 தொற்றுகளும் ஒரு மரணமும், Saskatchewanனில் 216 தொற்றுக்களும், Manitobaவில் 105 தொற்றுகளும் ஒரு மரணமும் பதிவாகின.

ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் புதன்கிழமை தலா 100க்கும் குறைவான தொற்றுக்கள் பதிவாகின.நாடளாவிய ரீதியில் புதன்கிழமை மொத்தம் 2,626 தொற்றுக்கள் பதிவாகின.