புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பில் முதலாவது கொரோனா மரணம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவால் முதலாவது உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக அவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அவருக்கு சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு இரத்தம் மாற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவந்ததாகவும் தெரியவருகிறது.

இதுவரை கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றினால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கில் இன்று முதலாவது மரணம் வவுனியாவில் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.