புதினங்களின் சங்கமம்

யாழில் பலரையும் கவர்ந்த இடத்தை சாராயக்கடையாக மாற்றிய காவாலிகள்!

யாழ் .தென்மராட்சியிலுள்ள அழகிய கால்வாய் ஒன்றைப் பார்ப்பதற்காக குடா நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அங்கு சென்றுவருவதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் பிரபலமடைந்த அந்த அழகிய கால்வாயில் மது போத்தல்களுடன் பல இளைஞர்கள் சென்று மது அருந்தி வருவதாகவும், ஆங்காங்கே மது போத்தல்கள் மற்றும் பல கழிவுகள் போடப்பட்டு, அந்த இடத்தின் அழகை சீரழிக்கிறார்கள் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த கால்வாயின் கண்ணைக் கவரும் அழகிய தோற்றம் இலங்கையிலுள்ள சில அழகான ஆறுகளை ஞாபகமூட்டுவதாக முக நூலில் பலரும் பகிர்ந்து கொண்டாடினர்..
யாழ் தென்பராட்சியின் சாவகச்சேரி பகுதியிலுள்ள இல்வாரை எனும் கிராமத்தில் குறித்த கால்வாய் காணப்படுவதுடன் இது கடந்த வருடம் புனரமைப்புச் செய்யப்பட்டதாக கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
குறித்த நீர் வாய்க்காலுடன் மரங்கள் ஒன்று கூடி பச்சை பசேலென அழகானதும் அமைதியான வயல் பகுதி அங்கு செல்வோரை இனம்புரியாத அமைதியில் ஆழ்த்துவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் சொர்க்கம்போன்று இருந்த இடம் இன்று சில இளைஞர்களால் நரகம் போல் மாறியுள்ளயுள்ளதாக பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.