புதினங்களின் சங்கமம்

தன்னைத் திருமணம் செய்ய மறுத்த இளம் தாயை கொலை செய்த 65 வயது சிங்கள தாத்தா!!

சூரியவெவ – பெத்தேவெவ பிரதேசத்தில் நேற்று பிற்பகல் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு 65 வயதுடைய நபரொருவர் குறித்த பெண்ணை பல தடவைகளை தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பெண்ணின் வீட்டுக்கு நேற்று சென்று மீண்டும் திருமண யோசனையை முன்வைத்துள்ளார்.

இதற்கு குறித்த பெண் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, பெண் குறித்த முதியவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கோபமுற்ற மேற்படி நபர் நேற்று பிற்பகல் குறித்த பெண் வீதியில் சென்றுக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்து அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இதையத்து கொலையை செய்த குறித்த நபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் , அவரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பெண்ணின் உறவினர்கள் சந்தேகநபரின் வீட்டை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.