கிளி்நொச்சி கல்மடுக் குளத்தில் நீரில் மூழ்கிய ஒருவரை காணவில்லை!! (Photos)
கிளிநொச்சி கல்மடுக் குளத்தில் நண்பர்களுடன் குளத்திற்கு சென்றபோது நீரில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று (டிச-25) பிற்பகல் 3 மணியளவில் குறித்த நபர் மூன்று பேருடன் குளத்திற்கு சென்றதாகவும் குளத்துக்குள் இறங்கிய போது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இதையடுத்து கூடசென்றவர்களுடன் ஊரவர்களும் இணைந்து தேடும் பணி கடந்த 2 மணி நேரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் இதுவரை நீரில் மூழ்கி காணாமல் போனவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
தேடும்ப பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.

