சற்றுமுன் பொத்துவிலில் இடம்பெற்ற விபத்தில் 9 வயது மாணவன் உயிரிழப்பு.!
பொத்துவில் பசரிச்சேனை ஜும்ஆ பள்ளிவாயல்க்கு முன்பாக விபத்து இடம்பெற்றுள்ளது..
இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக சென்ற 9 வயதுடைய அறூஸ் ஹமூத் எனும் மாணவன் மோட்டார் சைக்கிளினால் விபத்துக்குள்ளாகி பொத்துவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் காலமானார்.
தற்போது சடலம் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்


