கிளிநொச்சி பெரிய குளம் பகுதியில் முச்சக்கர வண்டி தடம் புரண்டதில் சாரதி பலி! (Photos)
கிளிநொச்சி பெரிய குளம் பகுதியில் முச்சக்கர வண்டி தடம் புரண்டதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி புளியம்பொக்கனை சந்தியில் இருந்துபெரியகுளம் நோக்கி பயணிக்கும் வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் முச்சக்கர வண்டி தடம் புரண்டதில் உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது இச்சம்பவத்தில் ஆறுமுகம் தட்சயன் (வயது 28) என்ற ஒரு பிள்ளையின் தந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளார் உயிரிழந்தவரின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

