புதினங்களின் சங்கமம்

மருதனார்மடம் கொத்தணி: ஒரே குடும்பத்தவர் ஐவர் உள்ளிட்ட மேலும் எண்மருக்கு தொற்று!

மருதனார் மடம் கொத்தணியில் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தவர் ஐவர் உள்ளிட்ட எண்மருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூரத்தி தெரிவித்துள்ளார்.

சற்று முன்னதாக அவர் வெளியிட்ட யாழ். போதனா ஆய்வகூட பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

22.12.2020. புதன் கிழமை

9.00 pm.

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 481 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டன.

9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை – 2

சிறுவிழான் – 1

மல்லாகம் – 5 (ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்)

பாரதிபுரம் / கிளிநொச்சி – 1

முன்னைய செய்தி…..

யாழ்ப்பாணம் பரிசோதனைக்கூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 10 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் மருதனார்மடம் கொத்தணியைச் சேர்ந்த எண்மர் தெல்லிப்பழையைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 120 பேருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 481 பேருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.