வடக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் நிதி மோசடி!! விசாரணைக்கு உத்தரவு!!

வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி..! ஊழியர் ஒருவர்
மீது தீவிர விசாரணை..

வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஊழியர் ஒருவர் நிதி மோசடியில்
ஈடுபட்டுள்ளாரா? என்பதை கண்டறிந்து அறிக்கை சமர்பிக்குமாறு பிரதம செயலாளர் விசாரணை
குழு ஒன்றை நிறுவியுள்ளார்.

வடமாகாணத்திற்கு உட்பட்ட திணைக்களங்களிலும் அதிகரிக்கப்பட்ட கணக்குப் பரிசோதனைநின்போது
ஓர் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஊழியர் கடந்த கால
வருமானத்தினை

சில வாகனங்களில் மறைத்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இவ்வாறு ஏற்பட்ட
சந்தேகத்தினையடுத்து குறித்த ஊழியரை உடனடியாக இடமாற்றம் செய்து கணக்காய்விற்கு
உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து குறித்த ஊழியரினால் 1.2 மில்லியன் ரூபா பணம் மாகாணத்தில் வைப்புச்
செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பணத்தை கையாடியதனை பணியாளரே ஏற்றுக்
கொண்டிருக்கின்றார்.

என்ற அடிப்படையிலும் இங்கே இந்த தொகைக்கான பணம்தான் கையாடப்பட்டதா என்பதனை கண்டறியும்
வகையில் உடனடியாக பிரதம செயலாளரினால் ஓர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட
குழுவின் அறிக்கை கிடைக்கப்பட்டதும்

இச் செயலிற்கான ஒழுக்காற்று விசாரணை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு
மாகாணத்திற்கு உட்பட்ட சகல அமைச்சுக்கள், திணைக்களங்களின் கணக்குகள்,

நிதி நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைக்காலமாக துரித மீட்டல் நடவடிக்கைக்கு உட்படுவதனால் பல
சம்பவங்கள் வெளியே தெரிய வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

error

Enjoy this blog? Please spread the word :)