யாழ்.பல்கலைகழக மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி..!

வெளிநாடு செல்வதற்காக சென்று வவுனியா – குருமன்காட்டில் நண்பர்களுடன் தங்கியிருந்த
யாழ்.பல்கலைகழக மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 22 வயதான பல்கலைகழக மாணவனுக்கே இன்று இரவு கொரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

நாளை திங்கள் கிழமை வெளிநாடு செல்வதற்காக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை
வவுனியாவுக்கு சென்றிருந்த குறித்த மாணவன்

குருமன்காடு பகுதியில் நண்பர்களுடன் தங்கியிருந்துள்ளான்.பின்னர் நேற்றய தினம் கொழும்பு
சென்று வெளிநாடு செல்வதற்காக பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டபோது,

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த மாணவன் தங்கியிருந்த
குருமன்காடு வீடு முடக்கப்பட்டுள்ளதுடன்

அங்கிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். மேலும் வவுனியாவில் அவன் தங்கியிருந்த
நாளில் சென்றுவந்த இடங்கள், சந்தித்த நபர்கள் குறித்து

சுகாதார பிரிவினர் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

error

Enjoy this blog? Please spread the word :)