புதினங்களின் சங்கமம்

வட மாகாண சுகாதார அமைச்சு சாரதிக்கு கொரோனா!! இழுத்து மூடப்பட்டது வட மாகாணசுகாதார அமைச்சின் ஒரு பகுதி!!

 

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் அலுவலகத் தொகுதிப் பணியாளர்களை அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பண்ணைப் பகுதியில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கட்டடத் தொகுதியின் முதலாவது மாடியில் சுகாதார அமைச்சுப் பணிமனை அமைந்துள்ளது.

சுகாதார அமைச்சின் சாரதிகளில் ஒருவருடைய நண்பருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று தொற்றுக்கு உள்ளானவர்களாக அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவராகிய இணுவிலைச் சேர்ந்த நபரும் சுகாதார அமைச்சின் சாரதியின் நண்பர்கள் என்றும் நேற்று முன்தினம் இருவரும் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த சாரதி பணியாற்றும் சுகாதாரத் திணைக்களக் கட்டடத் தொகுதியின் முதலாவது மாடியில் பணியாற்றும் ஊழியர்களை மறு அறிவித்தல் வரும் வரும் வரையில் பணிக்கு வரவேண்டாம் என்று திணைக்களத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சாரதிக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவுகளின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கை என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அருவிக்குத் தெரிவித்தார்.