புதினங்களின் சங்கமம்

யாழ் மாவட்ட தொற்று 82 ஆக அதிகரிப்பு! 135 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன!

யாழ். மருதனார்மடம் கொத்தணி கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பின் காரணமாக யாழ் மாவட்ட தொற்று நிலமை அபாய நிலையை எட்டியுள்ளது.

இன்று (டிச-15) சற்று முன்னர் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது வரையான நிலவரத்தின் அடிப்படையில் மருதனார்மடம் கொத்தணியில் 56 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து யாழ் மாவட்டத்தில் 3வது அலை தொற்று பரவல் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை கொரோனாத் தொற்ற உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது.

மருதனார்மடம் கொத்தணியில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் யாழ் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் மற்றும் உடுவில் கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகள் மறு அறிவித்தல் வரும்வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அந்தவகையில் தற்போது யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்குட்பட்ட 69 பாட்சாலைகளும், உடுவில் கல்வி வலயஙத்திற்குட்பட்ட 66 பாடசாலைகளுமாக 135 பாடசாலைகள் மருதனார்மடம் கொத்தணி தொற்று பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறையினரது அறிவுறுத்தலுக்கமைவாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புபட்டு யாழ் குடாநாட்டின் பலபாகங்களிலும் தொடர்ந்தும் பலர் சுயதனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் சந்தைத் தொகுதிகளில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதன்மூலம் யாழ் குடாநாட்டின் நிலை அச்சுறுத்தலாக மாறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆகவே பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடந்து கொள்வது அவசியமாகின்றது என்பதை இவ்விடத்தில் வலியுறுத்திக் குறிப்பிடுகின்றோம்.