ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளுடன் ஹிஸ்புல்லா!! அதிரவைக்கும் காட்சிகள் இதோ!!
இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் சம்பந்தப்பட்டதாக அரசாங்கத்தால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ‘நஹனல் தவ்ஹித் ஜமாத்’ என்ற அமைப்புக்கும், கிழக்கு மாகான ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளதான குற்றச்சாட்டுக்கள் இலங்கை முழுவதும் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல அரசியல்வாதிகள் இந்தக் குற்றச்சாட்டை நாடாளுமன்றத்திலேயே சுமத்தியிருந்தார்கள்.
தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ‘நஹனல் தவ்ஹித் ஜமாத்’ அமைப்புடன் ஹிஸ்புல்லா கைலாகு கொடுப்பதான புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், ஹிஸ்புல்லாவுக்கு ஆயுதம் தரித்த சில இளைஞர்கள் மரியாதை அணிவகுப்பு வழங்கும் மற்றொரு புகைப்படம் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் கிழக்கு மாகாண ஆளுநராக பதிவியேற்ற ஹிஸ்புல்லா தனது சொந்த ஊரான காத்தான்குடிக்கு வந்த போது அவருக்கு ஆயுதம் தாங்கிய இளைஞர் அணி ஒன்றினால் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொதுவாக சிறிலங்கா படைப்பிரிவுகள் எதுவும் அணியாத ஒருவகை சீருடை அணிந்து, ஏ.கே. 47, ரீ-56 ரக நவீன துப்பாக்கிகள் ஏந்திய இளைஞர் அணி ஒன்று அந்த மரியாதை அணிவகுப்பில் ஈடுபட்டிருந்தது.
ஹிஸ்புல்லா மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்ற நிலையில், அந்த ஆயுத இளைஞர் அணி எது என்கின்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது.