புதினங்களின் சங்கமம்

யாழில் ஆவா குழு ரவுடியின் வீட்டில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி தொழிற்சாலை!! வீடியோ

யாழ்ப்பாணம், இணுவிலில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இணுவில், துரை வீதிக்கு அண்மையான பகுதியில் உள்ள ஆவா குழு ரௌடியான நிசா விக்டர் என்பவனது வீட்டில், அறைக்குள் இந்த தொழிற்சாலை இயங்கியது.

நிசா விக்டர்

பரந்தனில் 28 வயதுடைய கார்த்தி குத்திக்கொலை! - Vampan

திரவவடிவில் நாட்டுக்கு எடுத்து வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் அந்த தொழிற்சாலையில் வடிகட்டப்பட்ட, ஐஸ் போதைப்பொருளாக மாற்றப்பட்டுள்ளது.

பல வருடங்களின் முன்னர் ஹோமாகம பகுதியில் ஐஸ் உற்பத்தி தொழற்சாலையொன்று கைப்பற்றப்பட்டதாகவும், இலங்கையில் ஐஸ் தொழிற்சாலை சிக்கிய இரண்டாவது சம்பவம் இதுவென்று பொலிசார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் பிரித்தெடுக்கும் உற்பத்தி நடைபெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.


தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த வீட்டினை சுற்றி வளைத்துள்ளனர். அதன் போது வீட்டில் இருந்த நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

அதனை அடுத்து வீட்டினுள் சென்று பொலிஸார் சோதனை நடாத்திய போது , அறை ஒன்றினுள் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கான கட்டமைப்பு காணப்பட்டுள்ளது.

ஆய்வு கூடங்கள் போன்று அக் கட்டமைப்பு காணப்பட்டுள்ளது.

அதனை அடுத்து தடயவியல் பொலிசார் , சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டோருக்கு பொலிஸார் தகவல் வழங்கிய நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தமது துறை சார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அத்துடன் சில மாதிரிகளை மேலதிக ஆய்வுகளுக்காக சம்பவ இடத்தில் இருந்து சேகரித்து சென்றுள்ளனர்.

அதன் ஆரம்ப கட்ட தகவலின் அடிப்படையில் , இரசாயன பதார்த்தங்களை பிரித்தெடுத்து , ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் கட்டமைப்பு காணப்படுகிறது. இவை சாதாரண நபர்களால் இலகுவில் செய்ய கூடியதில்லை. இவை இராசயன பதார்த்தங்களை கையாள கூடிய நபர்களால் தான் மேற்கொள்ள முடியும். இரசாயனவியல் தொடர்பிலான அறிவு உள்ள நபர்கள் மூலமாக தான் இவற்றை செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது குறித்த வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் , இரசாயன பகுப்பாய் பிரிவினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தப்பி சென்ற நபர்களையும் , குறித்த வீட்டில் வசித்து வந்தவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

அதேவேளை குறித்த வீட்டில் வசித்து வந்தவர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் , பிரதான சந்தேகநபரான ஆவா குழுக் காவாலி நிசாவிக்டர் கடந்த காலங்களில் ஆவா கும்பலுடன்  இணைந்து வன்முறைகளில் ஈடுபட்ட குற்றங்களில் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள நபர் எனவும் , தற்போது வன்முறை சம்பவங்களில் இருந்து விலகி வாழ்வதாக நீதிமன்ற வழக்குகளில் குறித்த நபர் தெரிவித்து வந்த நிலையில் , போதைப்பொருள் உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளமை பொலிஸ் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.