யாழில் கொடூர விபத்து!! காரில் சென்ற பெண், சிறுவன் பலி!! (Video)
யாழ்ப்பாணம் தென்மராட்சி நுணாவில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது கார் மோதியதில் பெண் ஒருவரும் சிறுவனும் உயிரிழந்துள்ளார். 3 பேர் படுகாயமடைந்துள்ளனா்.
நண்பகல் 12 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நுணாவில் சந்திக்கு அண்மையில் ரயர் கடைக்கு முன்பாக ரயர் திருத்த வேலைக்காக எரிபொருள் தாங்கி வாகனம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய திசையில் பயணித்த கார் ஒன்று அந்த வாகனத்தின் பின் பகுதியில் மோதியதில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அவர்கள் மூவரும் உடனடியாகவே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் பெண் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
WP – என்ற பதிவிலக்கமுடைய கார் என்பதால் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றபோதிலும் அவர்கள் குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. இக் காரின் ரயர் காற்றுப் போனதாலேயே விபத்து ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
50 வயதான பெண்ணும், 9 வயதான சிறுவனும் உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயமடைந்துள்ளனர்.