புதினங்களின் சங்கமம்

மீண்டும் கடும் மழை!! நாளை யாழ்ப்பாணம், கிளிநொச்சி பாடசாலைகளுக்கு விடுமுறை!!

சற்றுமுன் யாழில் கடும் மழை மீண்டும் பொழியத் தொடங்கியது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு நாளை டிசெம்பர் 7ஆம் திகதி திங்கட்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர், திருமதி
பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை தொடர்பாக கல்வி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின் இந்த
தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிரிவு புயல் காரணமாக கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வடமாகாணம் முழுவதும்
பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை
திங்கட்கிழமையும் விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.