புதினங்களின் சங்கமம்

மன்னாரில் காதல் ஜோடியின் திருமணத்தை நிறுத்திய புரெவி சூறாவளி; நடந்தது இதுதான்!

புரெவி சூறாவளி வடகிழக்கு கடற்கரை மற்றும் குச்சவேலி வழியாக நேற்று முன்தினம் இரவு இலங்கைக்குள் பிரவேசித்து குறிப்பிட்டளவு சேதத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சூறாவளியின் தாக்கத்தில் மன்னாரின் பல பகுதிகளில் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் அவதிப்பட்டனர்.

அந்த வகையில் மன்னாரில் பல போராட்டங்களுக்குள் மத்தியில் காதலித்து வந்த ஜோடிக்கு நேற்றையதினம் (3) திருமணம் இடம்பெறவிருந்தது.

இந்நிலையில் இந்த புயலின் தாக்கம் தொடர்பான எச்சரிக்கையால் திருமணம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழுமையடைந்த நிலையில், இறுதி நேரத்தில் திருமண திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.