அப்பாவின் இறுதிச் சடங்குக்கு திருகோணமலையில்!! கொரோனா தனிமையில் இருக்கும் லொஸ்லியா விரைந்து செல்கிறார்!!

இலங்கையின் முண்ணனி ஊடக நிறுவனமொன்றின் செய்தி வாசிப்பாளரான லொஸ்லியா கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பொஸ் எனும் நிகழ்ச்சி ஊடாக பிரபல்யம் அடைந்தார்.

மேலும் கடந்த நவம்பர் மாதம் 15 ஆம்திகதி லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் 52 ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளதாக லொஸ்லியாவின் சித்தப்பா தெரிவித்தார்.

லொஸ்லியாவின் தந்தையின் சடலம் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும், இலங்கை வெளியுரவு அமைச்சின் கண்கானிப்பின் கீழ் மேற்கொண்டு வருவதாகவும்,லொஸ்லியாவின் சித்தப்பா தெரிவித்தார்.

இலங்கைக்கு கொண்டு வரப்படும் லொஸ்லியாவின் தந்தையின் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உறவினர்களிடம் ஒப்படைப்பார்கள் எனவும் லொஸ்லியாவின் சித்தப்பா தெரிவித்தார்.

மேலும் சடலம் இலங்கைக்கு கொண்டு வரும் பட்சத்தில் திருகோணமலை அன்புவழிபுரம் பகுதியில் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அடுத்த வாரமளவில் லொஸ்லியாவின் தந்தையின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்படும் எனவும் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் லொஸ்லியாவின் சித்தப்பா நம்பிக்கை வெளியிட்டார்.

லொஸ்லியா தற்போது கொழும்மிலுள்ள ஹோட்டலொன்றில் சுயதனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும்,கடந்த 22 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளதாகவும் லொஸ்லியாவின் சித்தப்பா தெரிவித்தார்.

இதேவேளை 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிறைவடைவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. பிசி ஆர் முடிவுகள் லொஸ்லியாவிற்கு சாதகமாக வரும் பட்சத்தில் லொஸ்லியா திருகோணமலையில் உள்ள அவரது வீட்டிற்கு வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தினை பூர்வீகமாக கொண்ட லொஸ்லியா பின்னாளில் யுத்த சூழ்நிலை காரணமாக திருகோணமலை பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றதாகவும் மிகவும் கஸ்ட சூழ் நிலை காரணமாக லொஸ்லியாவின் தந்தை 2009 ஆம் ஆண்டு தொழில் வாய்ப்பு தேடி கனடாவுக்கு சென்றதாகவும் லொஸ்லியாவின் சித்தப்பா தெரிவித்தார்.

error

Enjoy this blog? Please spread the word :)