கைத் தொலைபேசியால் எவ்வாறு பலியானார் சிங்கள இளைஞர்!!
கட்டுகுருந்த மற்றும் களுத்துறை ரயில் நிலையங்களுக்கு இடையில் கையடக்கத் தொலைபேசியில் ஹாண்ட்-ஃப்ரீயை இணைத்துக்கொண்டு புகையிரத பாதையில் பயணித்த இளைஞர் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை குரே வீதியைச் சேர்ந்த மொஹமட் இருபான் மொஹமட் இமாட் என்ற 21 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த இளைஞன் தனது கையடக்கத் தொலைபேசி ஹாண்ட்-ஃப்ரீயை காதில் பொருத்திக் கொண்டு கட்டுகுருந்தவிலிருந்து களுத்துறை நோக்கி புகையிரதப் பாதையில் நடந்து சென்றபோது, அளுத்கமவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பல தடவைகள் ஹோர்ன் ஒலித்த போதும், சுற்றியிருந்தவர்கள் கூச்சலிட்ட போதும் அவர் புகையிரத பாதையில் பயணித்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

