புதினங்களின் சங்கமம்

வேலணை – புளியங்கூடல் வீதிப்புனரமைப்பில் ஈடுபட்டிருந்த நபருக்கு கொரோனா!!

 

யாழ்ப்பாணம் வேலணை – புளியங்கூடல் வீதிப் புனரைமைப்பில் ஈடுபட்டிருந்த கெக்கிராவ பிரதேசத்தினைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அருவிக்குத் தெரிவித்தார்.

வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்ற நடைமுறைக்கு அமைய குறித்த பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களின் மாதிரிகள் கொழும்புக்கு பிசிஆர் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தன.

அவற்றின் அடிப்படையில் கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,

புளியங்கூடல் சந்திப் பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றுக்கு குறித்த நபர் சென்று வந்திருந்த நிலையில் குறித்த கடையினை மூடி கடையில் பணிபுரிந்தவர்கள் உட்பட்டவர்களையும் தனிமைப்படுத்துவதற்கு சுகாதாரத் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்திருப்பதாக புளியங்கூடல் தகவல்கள் தெரிவிக்கின்றன.