மாதவிடாய் பைக்கற்றுக்கள் விலை அதிகரிப்பு!! குமுறுகின்றார் பிரியா நடேசன்!!
அன்றைக்கு கூட பெண்களோட மாதவிடாய் என்ற விடயத்தை மார்க்கெட்டிங்காக மாத்திவரும் கம்பனிகளையும் அதற்கு துணைபோகும் அரசாங்கத்தையும் பற்றி பேச வேண்டும் என நினைத்தேன்.
சில விடயங்கள் கண்ணுக்கு தெரியாதளவிற்கு நடந்தேறி வருகின்றன. காரணம் நாம் கண்மூடித்தனமாக இருப்பது மாத்திரமல்ல பெண்கள் சமாச்சாரம் தானே என கண்டு கொள்ளாமலும் இருப்பதே
இரண்டுவாரங்களுக்கு முன்னர் Eva எனப்படும் நப்கீன் பக்கற் சுமார் பத்து ரூபாயால் அதிகரித்திருந்தது.
அதாவது தற்போதைய விலை 145 ரூபாய்
ஆரம்பகாலத்தில் இந்த மாதவிடாய் பக்கற்றுக்கள் எம் இடங்களில் இருக்கவில்லை. அதற்கு பதிலாக எமது முன்னோர்கள் சுத்தமான பருத்தியால் ஆன துணிகளை பயன்படுத்தினர்.
ஆனால் அதனோடு பயணிப்பது நடப்பது சிரமம் முன்காலத்தில் இருந்த பெண்கள் வீட்டிலே இருந்ததால் அவர்களிடம் உழைத்து பணம் ஈட்டும் அளவிற்கு வசதி வாய்ப்பும் இல்லாததால் அவர்கள் அதனை தவிர வேறு எதனையும் யோசிக்க முடியவில்லை..அத்தோடு வேலைக்கு பெண்கள் போக ஆரம்பித்தபின்னர் இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொண்ட கம்பனிகள் மாதவிடாய் பக்கற்றுகளை செய்து குவித்தது. நம் அவர்களுக்கு அதன் தேவையை உணர்த்த பணத்தை குவித்து விளம்பரங்களையும் அள்ளிக்குவித்தார்கள். விலை அதிகம் என்றாலும் இலகுவானதும் வசதியானதும் என்பதனால் வேலைக்கு போகும் பெண்கள் பயணம் செய்யும் பெண்கள் என வாங்க ஆரம்பித்து இன்று எல்லா பெண்களும் அதனையே வாங்கி பயன்படுத்த அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட கம்பனி உற்பத்தியின் அளவை அதிகரித்து நியாய விலைக்கு கொடுப்பதனை விடுத்து நாளுக்கு நாள் விலையை ஏற்றி விட்டிருக்கின்றன.
இதனால் பெண்கள் பாதிக்கப்பட்டாலும் திருப்பி கேட்க முடியாமல் சென்று விடுகின்றனர். அரசாங்கமும் அதனை கண்டு கொள்ளாது தனக்கு சாதகமாக பயன்படுத்தி விட்டது. எல்லாம் போக பாதிக்கப்பட்டது பெண்களே…
சீனியோ அரிசியோ இரண்டு ரூபாய் விலை கூடினாலும் தட்டி கேட்கும் நம்மவர்கள் இதன் விலை பத்துரூபாயால் அதிகரித்தும் மௌனித்து இருக்கின்றனர்.
பிரியா நடேசன்

