Home புதினங்களின் சங்கமம் சங்குப்பிட்டியில் குலதீபாவை கொன்றவ தினேஷ் மேளகாரன் இல்லையாம்! இசைவேளாளர் கொதிக்கிறார்களாம்!!

சங்குப்பிட்டியில் குலதீபாவை கொன்றவ தினேஷ் மேளகாரன் இல்லையாம்! இசைவேளாளர் கொதிக்கிறார்களாம்!!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்.

கடந்த மாதம் 11ம் திகதி பூநகரி பகுதியில் இடம்பெற்ற கொலைச்சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கூறப்படும் தினேஷ் என்பவர் தவில் வித்துவான் என்று கூறப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்புரை செய்யப்படுகிறது.
குறித்த நபர் ஏற்கனவே பல திருட்டு சம்பவங்கள் குற்றச்செயல்கள் உடன் தொடர்புபட்டு பல வருடங்களாக தலைமறைவாக வாழ்ந்து வந்தவர். முதலில் அவர் ஒரு தவில் வித்துவான் அல்ல என்பதை அறியத்தருகின்றோம். எனவே அவர் தொடர்பான செய்திகளை வெளியிடுகையில் தவில் வித்துவான் என்பதை குறிப்பிட வேண்டாம் என சமூக ஊடகங்களுக்கு தாழ்மையாக வேண்டுகோள் விடுக்கின்றோம்
இலங்கை இசைவேளாளர் இளைஞர் பேரவை