இலங்கையில் மரணம் 94 ஆக அதிகரித்தது! மேலும் நால்வர் உயிரிழப்பு!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இரவு அறிவித்துள்ளார்.
மூன்று ஆண்களும், ஒரு பெண்ணுமே உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
கினிகத்தேன பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயது ஆண், சியம்பலாபே பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயது ஆண், கொழும்பு 15ஐச் சேர்ந்த 73 வயது பெண், பண்டாரகம – அட்டலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயது ஆண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்துக் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆக உயர்வடைந்துள்ளது.

