கிளிநொச்சியில் ஒருவருக்கு கொரோனா!! நாளை முதல் கிளிநொச்சி பாடசாலைகள் மூடப்படுகின்றன!!
கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை (நவ. 24) செவ்வாய்க்கிழமை தொடக்கம் மறு
அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன்
அறிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் கோரோனா தொற்றாளர் ஒருவர் இன்று கண்டறியப்பட்ட நிலையில் சுகாதாரத்
துறையின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் 72 வயதுடைய வயோதிபர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. “கிளிநொச்சி 55ஆம் கட்டையில் கிளி. பாரதிபுரத்தைச் சேர்ந்த ஏ9 வீதி வைலஸ் அருகில் உள்ள ஒயில் கடை நடத்தும் வியாபாரி
ஒருவருக்கு கொரொனா நோய் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் கிளிநொச்சியை சேர்ந்தவர். அவருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பதை
இன்னும் அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை.
அடையாளம் காணப்பட்ட கொரோனா கொத்தணிகளுடன் தொடர்பில்லாத ஒருவர் -கொரோனா இரண்டாம்
அலையில்- வடக்கில் அடையாளம் காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்
அவர் வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகிறார்.
கிளிநொச்சி – 155ம் கட்டை பகுதியில் ஒயில் விற்பனை நிலையம் ஒன்றை நடாத்திவரும் சுமார்
72 வயதான தொண்டமான் நகரை சேர்ந்த ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டிருக்கின்றது.
குறித்த நபர் கிளிநொச்சி மாவட்டத்தில் சென்றுவந்த இடங்கள், பழகிய நபர்களை அடையாளம்
காண்பதற்கான துரித விசாரணைகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றது.

