புதினங்களின் சங்கமம்

காதலியுடன் நீா் வீழ்ச்சியை பாா்க்க சென்ற மாணவனிற்கு நேர்ந்த கதி!

நாவலப்பிட்டி- கலபொட நீா் வீழ்ச்சியை பாா்வையிட தனது காதலியுடன் சென்ற 18 வயதான பாடசாலை மாணவன் நீாில் இழுத்து செல்லப்பட்டு உயிாிழந்துள்ளாா்.

சம்பவத்தில் கம்பளை பகுதியை சேர்ந்த 18 வயதான மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை 3.00 மணியளவில் தனது காதலியுடன் குறித்த மாணவர் அங்கு நீராட சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது அவர்கள் இருவரும் நீராடும் போது குறித்த மாணவர் திடீரென நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணால் போயுள்ளார்.

மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு இருவரும் குறித்த நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.

Image may contain: one or more people, outdoor and waterImage may contain: 1 person, selfie, outdoor, close-up and water