புதினங்களின் சங்கமம்

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவரை முக்கிய பதவியில் நியமிக்க ஜோ பைடன் முடிவு; தென்னிலங்கை ஊடகம்!

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பெண்ணை முக்கிய பதவிக்கு நியமிக்க அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது என தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் குறித்த ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி பின்வருமாறு..

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் மாற்றங்களுக்கான சபைக்கு ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சுசன் ரைஸ் நியமிக்கப்பட உள்ளார்.

சுசன் ரைஸ் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானர் எனவும் புலிகளுக்கு எதிராக இலங்கை படையினர் முன்னெடுத்த போரை நிறுத்த முயற்சித்தவர் எனவும் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் யோசனையை கொண்டு திட்டமிட்டவர் எனவும் குறித்த சிங்கள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுசன் ரைஸ் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் எதிர்வரும் 2021 ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்க உள்ளார்.

இதனையடுத்து சுசன் ரைஸ் குறித்த மாற்றங்களுக்கான சபைக்கு நியமிக்கப்பட உள்ளதாகவும் குறித்த சிங்கள ஊடகங்கள் கூறியுள்ளது.

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் எதிர்வரும் 2021 ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்க உள்ளார், அதன் பின் இந்த நியமனங்கள் உடன் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக குறித்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.