புதினங்களின் சங்கமம்

இலங்கையில் மேலும் 309 கொரோனா தொற்றாளர்கள்!! இருவர் பலி!!

இலங்கையில் மேலும் 309 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதே வேளை
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் றுதிப்படுத்தியுள்ளார்.

அவர்களுள் ஒருவர் கொழும்பு 11 பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் உயிரிழந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

அத்துடன் களனி பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களிக் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்

இலங்கையில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் சேவையாற்றும் 14 இந்திய நாட்டு பிரஜைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி முகத்திடலுக்கு அருகில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் குழுவினரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிறுவனத்தில் 50 ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் இவ்வாறு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.