கிளிநொச்சி யூனியன்குளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா!
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட அக்கராயன்குளம் யூனியன்குளத்தினைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் வெளியிடுகின்ற அறிக்கையிலேயே அவர் சற்று முன்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
11.11. .2020.
6.30 pm.
* இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 347 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.
* கிளிநொச்சி கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்படி நபர் கொழும்பில் தொழில் புரிந்து தற்போது வீடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர். (யூனியன் குளம்)
* இன்றைய பரிசோதனையில வடக்கு மாகாணத்தில் ஏனையவர்களுக்கு Covid-19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. .

