புதினங்களின் சங்கமம்

ஐந்தாவது மரணமும் உறுதி செய்யப்பட்டது: மொத்த கொரோனா உயிரிழப்பு 41!

இன்றைய தினம் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட ஐந்தாவது மரணமும் சற்று முன்னதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராகம பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ள நிலையில், ராகமை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இலங்கையில் பதிவான கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று (நவ-10) பி.பகல் முன்னதாக நான்கு பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்திருந்தமை உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது குறித்த மரணமும் உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஐந்தாவது மரணமும் உறுதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.