யாழில் வாள் வெட்டு தாக்குதல்: இருவர் படுகாயம்!! காவாலிகளுக்கு பொலிசார் வலைவீச்சு!
கரணவாய் பகுதியில் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு இருவரை காயப்படுத்திய நிலையில் தப்பிச் சென்ற நபர்களை பொலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த புதன்கிழமை(17) இரவு கரணவாய் சோழங்கன் பகுதியில் வாள் வெட்டிற்கு இலக்கான அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை நெல்லியடிப் போலிஸார் தேடி வருகின்றனர்.

