கொழும்பு: அடுக்குமாடிக் குடியிருப்புகள் முடக்கப்பட்டு மக்கள் நடமாட்டத்திற்கு தடை!
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கொழும்பு-15 இல் உள்ள சில அடுக்குமாடிக் குடியிருப்புகள் முடக்கப்பட்டு அங்குள்ள மக்களின் நடமாட்டம் தடைசெய்யப்பட்டுள்ளது.
இதற்கமைவாக கொழும்பு-15, முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள மெத்சந்த செவன, முவதொர செவன, சத்ஹிரு செவன, சியாபத் செவன, சிரிசர உயன அடுக்குமாடிக் குடியிருப்புகள் முதுடக்கப்பட்டு அங்குள்ள மக்களின் நடமாட்டம் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் விதிக்கப்பட்டிருக்கும் முடக்க நிலை இன்று (நவ-08) காலை முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

