இலங்கையில் இன்று மூன்றாவது மரணம்! 21 வயதுப் பெண்ணும் உயிரிழந்தார்!
இலங்கையில் மூன்றாவதாக இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பண்டாரகம பிரதேசத்தினைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவருக்கு 21 வயது என்றும் அவருடைய மரணம் அவருடைய வீட்டிலேயே நிகழ்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெண்ணின் மரணம் கொரோனாவால் நிகழ்ந்ததாக என்பது தொடர்பில் அறிவதற்காக அவருக்கு பிசிஆர் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை மாளிகாவத்தையைச் சேர்ந்த 42 வயதுடைய பெண், புறக்கோட்டையைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஆகிய இருவர் இன்று முற்பகல் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.
நேற்று வரையில் கொரோனாவால் இலங்கையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

