புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ் கல்வியங்காட்டைச் சேர்ந்த இளம்குடும்பஸ்தர் பிரான்சில் பலி!! (Photos)

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (05.11.2020) பிரான்ஸில் உயிரிழந்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான ச.சதீஸ்பாபு (வயது-39) என்ற இளம் குடும்பஸ்தரே திடீர் சுகவீனம் அடைந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது உயிரிழப்புக்கு மாரடைப்பு காரணம் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த மாதம் 27 ஆம் திகதி மாரடைப்புக் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்திருந்தார்.

புலம்பெயர் நாடுகளில் இளவயதினர் அதிகளவில் மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.