யாழ் சுன்னாகத்தில் நடமாடிய புதிய முகம்!! தற்கொலைதாரி என பொதுமக்கள் செய்த வேலை!!
சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சந்தேகத்துக்கு இடமாடினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர்
பிடிக்கப்பட்ட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதும்
விடுவிக்கப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
“சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவர், யாழ்ப்பாணம் நகரிலுள்ள இருக்கைகளுக்கு றெக்சீன் சீலை
அடிக்கும் வேலை வழங்கியுள்ளார். அதுதொடர்பில் அளவுகளை எடுக்க தனது பணியாளரை கடை
உரிமையாளர் சுன்னாகத்துக்கு அனுப்பிவைத்துள்ளார்.
வேலை வழங்கியவரின் வீட்டு முகவரி தெரியாமல் அந்த நபர் விசாரித்து அலைந்துள்ளார். அதனால்
சந்தேகம் கொண்ட ஊரவர்கள் அந்த நபரைப் பிடித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அந்த நபர் ஐந்து சந்தியைச் சேர்ந்தவர். அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்படுவார்”
என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவினர்.