புதினங்களின் சங்கமம்

பேஸ்புக் பதிவுகளை வைத்து பிடிக்க முயற்சி!! கொழும்பிலிருந்து ஓடிய தமிழர்களே அவதானம்!!

மேல் மாகாணத்தில் இருந்து ஒக்டோபர் 29 மற்றும் 30 திகதிகளில் வெளியேறியவர்களை அவர்களது பேஸ்புக் பதிவுகளைப் பயன்படுத்தி கண்டறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வெளியேறிய பலர் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல்கள் மற்றும் பிற இடங்களில் இருந்தவாறு எடுத்த படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர்.

பொலிஸாரின் உத்தரவுகளை மீறி இவா்கள் மாகாணத்தில் இருந்து வெளியேறியுள்ளனர் .

இவ்வாறு வெளியேறியவர்களைக் கண்டுபிடிக்க பொலிஸார் போஸ்புக் பதிவுகளைக் கண்காணித்து வருகின்றனர் என அஜித் ரோஹன கூறினார்.

அத்துடன் ஒக்டோபர் 29 அல்லது 30 ஆம் திகதிகளில் மேல் மாகாணத்திலிருந்து வந்த எவரையும் கண்காணிக்குமாறு அனைத்து பகுதி பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

இந்த இரண்டு நாட்களில் மேற்கு மாகாணத்திலிருந்து வந்த எவரும் 14 நாட்களுக்கு அவர்கள் இப்போது இருக்கும் இடத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அஜித் ரோஹானா கூறினார். அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அவா்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேல் மாகாணம் கொரோனா ஆபத்து வலயம் என்பதால் அப்பகுதியிலிருந்து வெளியேறி வேறொரு பகுதிக்கு செல்வது அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.