புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் 14 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய தோட்ட உரிமையாளர்..!

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் தோட்டத்துக்குள் ஆடு சென்று பயிர்களை அழித்ததாக தெரிவித்து தோட்டத்தின் உரிமையாளரால் அயல் வீட்டில் வசிக்கும் 14 வயது சிறுவனை தோட்டத்துக்குள் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கப்பட்டு உள்ளார்.

கிளிநொச்சி திருவையாறு மூன்றாம் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் தோட்டத்துக்குள் அயல் வீட்டு ஆடு சென்று பயிர் அழிவை ஏற்படுத்தியதாக தோட்டத்து உரிமையாளர் ஆட்டின் உரிமையாளர் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த 14 வயது சிறுவனை அழைத்துச் சென்று தனது தோட்டத்துக்குள் வைத்து கடுமையாக தாக்கியுள்ளார்.

குறித்த சம்பவமானது ஞாயிற்றுக்கிழமை (25) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட சிறுவன் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.