புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்திலும் கொரோனா மூர்க்கம்!! மேலும் பலர் இனங்காணப்பட்டனர்!!

யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியதாக இன்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் குறித்த மேலதிக விபரங்கள் சில வெளியாகியுள்ளன.

இன்று யாழ்ப்பாணத்தில் ஆறுபேர் அடையாளம் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,

அவர்களில் நால்வர் கொழும்பில் ஹொட்டல் ஒன்றில் பணி புரிந்தவர்கள் என்றும் குறித்த ஹொட்டல் நிர்வாகிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதை அறிந்தவுடன் யாழ்ப்பாணம் திரும்பியவர்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களில் மூவர் வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் யாழ்.மாநகரசபை எல்லைக்குள் வசிப்பவர் என்றும் தெரியவந்துள்ளது.

அதேவேளை,

உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மருதனார்மடம் பகுதியில் வசிக்கும் தாயும் மகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களின் குடும்பத்தலைவர் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்பிலிருந்து ஏற்கனவே கொரோனாத் தொற்றுக்கு உள்ளானமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. அவருக்கு தொற்று ஏற்பட்ட பின்னரேயே அவர்கள் யாழ்ப்பாணம் வந்ததாகவும் தெரியவருகிறது.

இதேவேளை குறித்த அறுவரும் பயணித்த வாகனங்கள், அவர்கள் சென்றுவந்த இடங்கள் குறித்த விசாரணையின் பின்னர் மக்களுக்கான அறிவுறுத்தல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.