Home Uncategorized யாழ் மருதனாமடம் சந்தை சுற்றிவளைப்பு! முகக்கவசம் அணியாத 11 பேர் கைது!! 6 மாத சிறை(Photos)

யாழ் மருதனாமடம் சந்தை சுற்றிவளைப்பு! முகக்கவசம் அணியாத 11 பேர் கைது!! 6 மாத சிறை(Photos)

முகக் கவசம் (Mask) அணியாதவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தலும் நோய்த் தடுப்பும் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை.
பொலீஸ் மற்றும் இராணுவத்தினருடன் இணைந்து பொது சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று மேற்கொண்ட கூட்டு செயற்பாட்டின் போது மருதனார்மடம் பொதுச் சந்தையில் முகக்கவசம் அணியாத மற்றும் முகக் கவசங்களை முறையாக அணியாத 11 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. தண்டனையாக பத்தாயிரம் ரூபா வரையான தண்டப்பணம் அல்லது 06 மாதம் வரையிலான சிறைத் தண்டனை அல்லது இவையிரண்டும் இணைத்து நீதவான் நீதிமன்றினால் வழங்கப்படலாம்.
கொவிட்-19 நோய்ப்பரவலின் மிகவும் இக்கட்டான சூழ்நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் இறுதி அஸ்திரமாக சட்ட நடவடிக்கைக்கு செல்லவேண்டிய நிர்ப்பந்தம். சுகாதாரத் துறையினரும், பொலீஸ், முப்படையினரும், உள்ளூராட்சி சபைகளும் கொவிட்-19 கட்டுப்பாட்டில் பெரும் போராட்டங்களை தினமும் சந்திக்க வேண்டியிருக்கிறது. தயவுடன் கோருகின்றோம் மூன்றே விடயங்களை;
1. முகக் கவசம்
2. ஒரு மீட்டர் சமூக இடைவெளி
3. சவர்க்காரமிட்டுக் கை கழுவுதல்