புதினங்களின் சங்கமம்

யாழ். நெல்லியடி விடுதியில் வெடிபொருட்களா?: திடீர் சுற்றிவளைப்பு! (Photo)

யாழ்.நெல்லியடி மாலு சந்திப் பகுதியில் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை(23)பிற்பகல் விடுதியொன்றைச் சுற்றிவளைத்துள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலொன்றின் அடிப்படையிலேயே மேற்படி சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால், குறித்த பகுதியில் பெரும் பரபரப்பான நிலையேற்பட்டுள்ளதாகவும் எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.