மருதங்கேணி கொரொனா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட 21 தொற்றாளர்கள்
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்க 21 கொரோனா தொற்றாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சர்ச்சைகளிற்கு மத்தியில் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை, நேற்று (19) கொரோனா சிகிச்சை வைத்தியசாலையாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில், நேற்று இரவு அங்கு 21 கொரோனா நோயாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
வவுனியா தனிமைப்படுத்தல் மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று உறுதியானவர்களே அங்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

