மரக்குற்றிகளை கடத்த வந்தவர்கள் பொலிஸைக் கண்டு தப்பி ஓட்டம்; உழவு இயந்திரம் மீட்பு!
கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட தர்மக்கேணிபகுதியில் சட்டத்துக்கு விரோதமாக வேம்பு மற்றும் நாவல் மரங்களை வெட்டி கடத்த முற்பட்டவர்கள் பொலிஸாரிடிம் மாட்டியுள்ளனர்.
பொஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த இடத்திற்கு விரைந்த பளை பொலிஸார், அங்கு மரக்குற்றிகள் அறுக்கப்பட்டு ஓர் இடத்தில் குவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், குறித்த மரக் குற்றிகளை உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றிக்கொண்டிருந்த சந்தேக நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்நிலையில் மரக்குற்றிகள் மற்றும் உழவு இயந்திரம் என்பன பொலிஸாரார் மீட்கப்பட்டுள்ளது.

