ரிஷாட் பதியுதீனுக்கு பயணத்தடை!!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைவாக கோட்டை நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியூதீனை தேடி நேற்று (14) இரவு மன்னார் மற்றும் கொழும்பிலுள்ள அவரது வீடுகளுக்கு 6 பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

எனினும், இந்த நேரம் வரையிலும் அவர் அவ்விரு வீடுகளிலும் இருக்க​வில்லை.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் பாதுகாப்பு உத்தியோகத்தரான ​கான்ஸ்டபிள் ஒருவரும் கணக்காளர் ஒருவரும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ரிஷாட் பயன்படுத்திய கார்கள் இரண்டும் துப்பாக்கிகள் 2 என்பனவும் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

error

Enjoy this blog? Please spread the word :)